NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி – இராணுவ பிரிகேடியர் உள்ளிட்டோருக்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைப்பு!

சுத்தமான குடிநீருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதுடன் 45 பேரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ பிரிகேடியர் மற்றும் மூவருக்கு எதிரான தீர்ப்பை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்க கம்பஹா விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு இன்று தீர்மானித்துள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​எதிர்வரும் 17ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார தெரிவித்தார்.

இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ பிரிகேடியர் மற்றும் முப்படை வீரர்களையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

Share:

Related Articles