அண்மைகாலமாக சீனாவில் துரியனின் தேவை அதிகரித்துள்ளதால் மத்திய சுலவேசி மாகாணத்தில் இருந்து நேரடியாக சீனாவுக்கு துரியன் பழங்களை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இந்தோனேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுலவேசி மாகாணத்தில் 12 மாவட்டங்கள் அமைந்துள்ளன. அங்கு சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான துரியன் மரங்கள் காணப்படுகின்றன. 30000 ஹெக்டேயர் பரப்பளவில் துரியன் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.
சுலவேசியிலிருந்து சீனாவுக்கு 600பில்லியன் ரூபாய்க்கு அதாவது 36.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.