NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை!

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (17) நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க மகளிர் அணியை வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 302 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44 ஓவர்கள் 3 பந்துகளில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

ஒருநாள் போட்டியில் மகளிர் அணி அதிக ஓட்டங்களை எட்டுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய அணித்தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் வீராங்கனை ஒருவர் பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டமாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, போட்டியின் அட்டநாயகியாக சமரி அத்தபத்து தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகியாக லாரா வோல்வார்ட் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles