தென் கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவியிலிருந்து விலகினாலும் விலகாவிட்டாலும் தாங்கள் அவரை பதவியிலிருந்து விலக்குவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலகியதைத் தொடர்ந்து தாமும் பதவி விலகுவதாக தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் அறிவித்துள்ளார்.
அவசரகால இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி யூன் சுக் யோல் நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அவர் மீது குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
வட கொரியாவின் கம்யூனிச சக்திகளிடமிருந்து’ நாட்டைப் பாதுகாக்கவும் அரசுக்கு எதிரான சக்திகளை ஒழிக்கவும் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தவதாக தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனினும், அவரது பிரகடனத்திற்குப் பின்னர் இரண்டு மணி நேரத்திற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மீறி, நாடாளுமன்றத்தில் கூடி அவரது முடிவைத் தடுப்பதற்கு வாக்களித்தனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அமைதியின்மையும் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திடீரென அமுல்படுத்தப்பட்ட அவசரகால இராணுவச் சட்டத்தைத் தளர்த்துவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.