இலங்கையில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்யும் நோக்கில் அரசாங்கம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ”தனுகா திஸாநாயக்க” தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்றைய(18.03.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இந்த சமூக வலைத்தள செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், தற்போது அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இளைஞர்கள் தங்களுடைய எண்ணங்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர முடியும் எனவும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ”தனுகா திஸாநாயக்க ”தெரிவித்துள்ளார்.