ஜனாதிபதித் தேர்தல் செலவுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள உபகழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு உபகுழுவொன்றை அமைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக களுத்துறை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு தீர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த 60 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில், உதவித் தேர்தல் அதிகாரி ஷானக திரிமனவின் மேற்பார்வையில் இந்த உபகுழு ஸ்தாபிக்கப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் எண் மூன்றின் கீழ் குறித்த உப குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.