NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் நாளை தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது, வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக அலுவலகங்களை அமைத்துள்ளனர்.

அந்த அலுவலகங்களில் தொகுதி அளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும் இன்று நள்ளிரவுடன் அகற்றப்பட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அலுவலகத்தை மாத்திரமே வைத்திருக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த திகதியில் இருந்து, வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும் என்பதுடன், வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பராமரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த அலுவலகங்களில் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த பிரச்சார பணிகளைச் செய்யவோ முடியாது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles