NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் சரத் பாபு காலமானர் !


உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத் பாபு சிகிச்சை பலனின்றி காலமானர்.


தமிழ் , தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் சரத் பாபு (வயது 71).
மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான சரத் பாபு சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களிலும் சரத் பாபு நடித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Share:

Related Articles