தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேற்று முதல் மின் விநியோகத்தை தடை செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இன்றைய தினமும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் இடம்பெறவுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது பிராந்தியங்களில் மின்வெட்டு இடம்பெறும் முறை குறித்து அறிந்துக் கொள்வதற்காக புதிய முறைமை ஒன்றை இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, மின்சார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட dm.ceb.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து அல்லது மின்சார சபையின் கைப்பேசி செயலி மூலம் அல்லது 1987 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் அதை அறிந்துக் கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.