NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நானுஓயாவில் கார் விபத்து..! ஒருவர் காயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா வின்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த குறித்த மகிழுந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles