NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாரம்மல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு!

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்ளையடிப்பதற்காக வந்த மூவரில் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை விற்பனை செய்வதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்தவர்களிடம் கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த விளம்பரத்திற்கு அமைய, ருவன்வெல்ல பிரதேசத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சிலர் வந்ததாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அவர்களைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.

அவர்களை நாரம்மல பகுதியில் உள்ள இடமொன்றுக்கு வருமாறு கூறிய கொள்ளையர்கள், அந்த இடத்தை அடைந்ததும் கொள்ளையர்கள் கூரிய ஆயுதங்களால் அவர்களது மோட்டார் வாகனத்தை தாக்கியுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸ் அதிகாரிகள் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கொள்ளையர்கள் தப்பியோடியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கொள்ளையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய வந்த இருவர், கொள்ளையர்களின் தாக்குதலால் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles