NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாளை சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சில பகுதிகளில் நீர் விநியோகம் நாளை (26) தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

ரன்பொகந்துகம மற்றும் பல்குடிவெல பகுதியில் இருந்து பூகொடை வரையான கட்டமைப்பில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் நீர் விநியோக தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பூகொடை, ரன்பொகனுகம வளாகம், வத்துபிடிவல, மாஇம்புல, மடுவேகெதர, அவுராபோல மற்றும் அத்தனகல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles