NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நிறைவுக்கு வந்த ஆஷஸ் தொடர் – அவுஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றுடன் (09) நிறைவுக்கு வந்த நிலையில், மிச்செல் ஸ்டார்க்கின் 5 விக்கெட் குவியலை ஹெரி புறூக்கின் அரைச் சதம் விஞ்சியதால் அவுஸ்திரேலியாவை 3 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து தனக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நீடித்த போதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நிறைவடைந்தது.

போட்டியின் நான்காம் நாளான நேற்று காலை வெற்றிக்கு மேலும் 224 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது 2ஆவது இன்னிங்ஸை விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Share:

Related Articles