நிலக்கரி தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை நாட்டிற்கு தேவையான நிலக்கரி இருப்புக்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை எவ்வித பிரச்சினையுமின்றி இயக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.