(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வறட்சியான காலநிலை காரணமாக 50,000 ஏக்கர் நெற்செய்கைக்கு சேதம் ஏற்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நெற்செய்கை சேதம் தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 15 மாவட்டங்களில் 60,943 குடும்பங்களைச் சேர்ந்த 210,652 பேர் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு சில மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் தொடர்ந்தும் வறண்ட காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் வலியுறுத்தியுள்ளார்.