NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீர்கொழும்பில் முன்னெடுக்கபட்ட திடீர் சோதனையில் 137 பெண்கள் கைது!

நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைநடவடிக்கையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் அதில் பணிபுரிந்த 137 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தலதுவ தெரிவித்துள்ளார்.

அத்தோடு மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகளில் பணிபுரிந்து வந்த 2 பெண்களுக்கு HIV எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தலதுவ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

Share:

Related Articles