நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலைய மின் உற்பத்திக்காக 23 நிலக்கரி கப்பல்கள் வருகை தந்துள்ளதாகவும், 23ஆவது கப்பலில் இருந்து, நிலக்கரி இறக்கப்பட்டு வருவதாகவும் அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் தற்போது சுமார் 380,000 மெட்ரிக் டொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தற்போது இலந்தடி கடல் பகுதியில் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அதிகளவில் காணப்படுவதுடன், வருகை தரும் கப்பல்களில் இருந்து தினமும் நிலக்கரி இறக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறு இறக்கப்படும் நிலக்கரி தொகை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டுவரப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.