NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நேபாளத்தில் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரிப்பு..!

நேபாளத்தில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

பலத்த மழை காரணமாக நேபாளத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதேவேளை, வெள்ளத்தில் சிக்கி 69 பேர் காணாமற் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல பகுதிகள் வெள்ளிக்கிழமை முதல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, பல ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டுவில் 200 இற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நீலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் தெற்காசியா முழுவதும் பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழமையானது என்றாலும் காலநிலை மாற்றம் அவற்றின் தீவிரத்தை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், காத்மாண்டில் சனிக்கிழமை காலை முதல் 24 மணி நேரத்தில் 240 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழச்சி பதிவானதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles