NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜர் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு – தேசிய துக்க தினம் அறிவிப்பு..!

நைஜர் நாட்டின் மேற்கே மாலி மற்றும் புர்கினா பசோ (டீரசமiயெ குயளழ) ஆகிய இரு நாடுகளின் எல்லையையொட்டிய கொகரவ் நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா கிராம பகுதியில் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயுதமேந்தய பயங்கரவாத குழுவினர், மசூதியை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிககப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 44 பேர் பஉயிரிழந்துள்ளதுடன், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, 3 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐளு அமைப்பே காரணம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles