ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் எனுகு-போர்ட் ஹார்கோர்ட் நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஒரு பஸ் – லொறி விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லொரி மீது மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடள், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் இந்த விபத்தில் சிக்கி 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை பலக்கத்தினால் இந்த விபத்து நேர்ந்துள் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.