NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பக்கவாத நோயாளியை மீண்டும் இயற்கையாக நடக்க வைக்கும் சோதனை வெற்றி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் முடமான பக்கவாத நோயாளியை மீண்டும் நடக்க வைத்த அற்புதமான அறுவை சிகிச்சை பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

40 வயதான டச்சுக்காரருக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிள் விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த இந்த நபரின் மூளையில் செயற்கை எலக்ட்ரானிக்ஸ் பொருத்தி சுவிஸ் விஞ்ஞானிகள் குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் அவரது எண்ணங்கள் முதுகுத்தண்டு வழியாக அவரது பாதங்களுக்கு கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் அடிப்படைப் பணியானது, நபரின் மண்டை ஓட்டில் இரண்டு இடங்களிலிருந்து 5 செ.மீ விட்டம் கொண்ட வட்டவடிவத் துளைகளை வெட்டி, தலையில் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டின் உதவியுடன் தொடர்புடைய மின்னணு சாதனங்களை வயர்லெஸ் முறையில் அவரது மூளைக்கு அனுப்புவதாகும்.

பரிசோதனையின் வெற்றிக்குப் பிறகு, குறித்த நபர் இயற்கையாக நிற்கவும் நடக்கவும் முடிந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதற்கான பரிசோதனை இன்னும் அடிப்படை நிலையில் உள்ளதால், முடமான நோயாளிகளுக்கு வழங்க பல ஆண்டுகள் ஆகும் எனவும், நுணுக்கமான இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ள நரம்பியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த டச்சு நாட்டவருடன் தொடர்புடைய அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கையும் ஜூலை 2021 முதல் தொடங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles