NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பச்சிளம் குழந்தை திடீர் உயிரிழப்பு – ஹொரணையில் பரிதாபம்!

நித்திரையிலிருந்த நான்கு வயது சிறுமி, நித்திரையிலிருந்தவாரே இன்று பகல் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

ஹொரணை, திக்ஹேனபுர 11 ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த சசுகி அனன்யா சேசந்தி என்றழைக்கப்படும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது. 

வழமைபோல், தனது தாயுடன் சிறுமி நித்திரைக்குச் சென்றுள்ளதுடன், சிறுமியின் தாய் எழுந்து பார்த்தபோது குழந்தை நித்திரையில் இருந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா். 

சிறுமி நித்திரையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை அவதானித்த தாய், சிறுமிக்கு ஆடையை மாற்ற தயாராகியபோது சிறுமியின் உடம்பு உயிரற்ற நிலையில் இருந்ததை உணர்ந்து குழப்பமடைந்து அவரின் கணவருக்கு தொலைபேசியினூடாக அறிவித்துவிட்டு, சிறுமியை துாக்கிகொண்டு வீதியில் வந்த மோட்டார் சைக்களிலொன்றினூடாக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளாா். 

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

பிரேத பரிசோதனை இன்று ஹொரணை ஆதார வைத்தியசாலையில் திடீர் மரண பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

ஹொரணை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share:

Related Articles