NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பட்டமளிப்பு விழாவில் தாக்குதல் : 100 பேர் உயிரிழப்பு !

சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் , 240 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles