NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணம் செலுத்தும் வைத்தியசாலை படுக்கை தொகுதிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பணம் செலுத்தும் படுக்கை தொகுதிகளை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வைத்தியசாலைகளில் பணம் செலுத்தும் படுக்கை தொகுதி வசதியை நீடிப்பதற்கான முன்மொழிவு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள், சிரேஷ்ட குடிமக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தற்போது அரசு வழங்கும் காப்பீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு வைத்தியசாலைகளில் வழங்கப்படும் பல்வேறு சுகாதார சேவைகளை பணம் செலுத்தி பெறுவதற்கு குறிப்பிட்ட நபர்கள் தயாராக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்காக அரச வைத்தியசாலைகளில் பணம் செலுத்தும் படுக்கை தொகுதிகளை நிறுவுவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share:

Related Articles