NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணவீக்கம் தொடர்பான மத்திய வங்கியின் அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த வீழ்ச்சியானது, பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியினால் 2023 ஏப்ரலில் எதிர்பார்க்கப்பட்ட பணவீக்க வீழ்ச்சி பாதைக்கு அமைவாக காணப்படுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.


உணவுப் பணவீக்கமானது ஏப்ரலில் 30.6 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 21.5 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உணவல்லாப் பணவீக்கம் ஏப்பிரலில் 37.6 வீதத்திலிருந்து 27 வீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.


ஏப்ரலில் பணவீக்கமானது 35.3 வீதமாகவும், உணவுப் பணவீக்கம் 30.6 வீதமாகவும் காணப்பட்ட நிலையிலேயே மே மாதத்தில் சாதகமான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles