NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களுக்கு பணி நீக்கக் கடிதம்

பணிப்புறக்கணிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து புகையிரத ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதும்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் புகையிரத நிலைய அதிபர்களுக்கு இந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (11) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத நிலைய அதிபர்களுக்கு புகையிரத பொது முகாமையாளரால் அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles