எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நேற்று (09) முதல் ஒரு கிலோ தக்காளி மற்றும் கத்தரிக்காயின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நாட்களில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 250 ரூபாவையும், ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாவிலிருந்து 350 ரூபாவையும் எட்டியுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில் தக்காளி மற்றும் கத்தரிக்காய்க்கு சந்தையில் அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.