NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க உத்தரவு.!!

பதுளை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை பிணையில் விடுவிக்க பதுளை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான பிணை மனுவை பரிசீலித்த நீதவான், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கினார்.

2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார். ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை பெற்றுள்ளார். இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு (173 லட்சம் ரூபாய்) மேல் நட்டம் ஏற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles