NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல மாதங்களாக புனரமைக்கப்படாது இருக்கும் வீதி – பொதுமக்கள் விசனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மஸ்கெலியா – பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 இலட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதிக்கு வருவதற்கான பிரவுன்சிக், எமலின் தோட்ட வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதனை புனரமைப்பதற்கு பல வருடங்களாகியும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு முச்சக்கரவண்டியில் செல்வதற்காக இருந்தால்கூட 1000 ரூபா அறிவிப்படுகின்றது என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீதி புனரமைக்கப்படாததால் மாணவர்கள், அரச அதிகாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குறித்த வீதியை உரிய வகையில் புனரமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles