NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அப்போது அங்கு திடீரெதன குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உட்பட சுமார் 35 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. மேலும் 80 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் மனித குண்டு மூலம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Share:

Related Articles