பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நள்ளிரவு 1.44 மணியளவில் இந்திய தாக்குதல் மேற்கொண்டுள்ளது குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தாக்குதல் நடாத்தியதையடுப்பித்து மொடர்த்தமாமாக 9 இடங்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வெறும் 25 நியமிடங்களில் நடைப்பெற்ற இந்த தாக்குதலில் பாக்கிஸ்த்தானின் பல முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
மேலும் போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பவில்லை எனவும் இந்திய ரானும் செய்திவெளியிட்டுள்ளது.
இதனால் இன்று மாலை இந்துயாவின் 200 ற்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடைப்பெற இருக்கின்றது. மேலும் சென்னை
சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் பதற்றம் எதிரொலியாக ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஞ்ச், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் ஆகிய 9 விமான நிலையங்கள் வரும் 10 ஆம் தேதி காலை 5:30 மணி வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..