பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமது வருமான செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் கையளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செயலகத்திற்கும் செலவு அறிக்கையை கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.