NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்து!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

பெலவத்தை திசையிலிருந்து பாராளுமன்ற வீதி ஊடாக பொரளை நோக்கி பயணித்த போது, ​​டிபென்டர் வாகனம் தியவன்னா சதுப்பு நிலத்தில் விழுந்துள்ளது.

விபத்து நடந்த போது சாரதி மட்டும் அங்கு இருந்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இராணுவத்தினரின் தலையீட்டின் பின்னர், ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.

Share:

Related Articles