NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலஸ்தீனம் மீது கொடூர தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…!

பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் கொடூரமான தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இதில், ஒரு மருத்துவர் மற்றும் ஆசிரியர் ஒருவர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
   
ஜெனின் நகரில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ், ஃபத்தா, இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் நகரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
 
உயிரிழந்த மருத்துவர் மற்றும் ஆசிரியர் சேவை நிலையங்களுக்குச் செல்லும் போது தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

Share:

Related Articles