(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பால்மாவுக்கான இறக்குமதி வரியானது கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி இன்று முதல் அமுலுக்கு வரும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு 20 சதவீதம் அல்லது 225 ரூபாய் சுங்க வரி அமுலில் இருந்தது.
எனினும், பால்மா மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டாலும் பால்மாவின் விலை அதிகரிக்காது என பால்மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.