NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிக்குவின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலி!

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீடொன்றிற்குள் ஒருவர் காயமடைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காயமடைந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அதன்பின்னர், காயமடைந்த நபர் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்கொடவத்தை, மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சந்தேக நபரான பிக்கு உயிரிழந்தவரின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,பிக்கு விகாரை ஒன்றில் வசிக்காமல் மாரவில பிரதேசத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்ததுள்ளதாகவும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.தற்போது அவர் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வயோதிபர் மீதான தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், கிரிஉல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles