ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் செயற்பட்டு புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இராஜகிரிய – கொட்டுவேகொட விவேகராம புராண விகாரையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஜனநாயகத்தைப் பாதுகாத்து அமைதி, நட்பு மற்றும் ஒற்றுமையுடன் பணியாற்றுவது அனைவரின் கடமையும் பொறுப்பும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை வீரகெட்டிய ராஜபக்ஷ மத்திய மகா வித்தியாலயத்தில் வாக்களித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரையில் உள்ள சைகோஜி முன்பள்ளி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்துள்ளார்.



