NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல தனியார் வைத்தியசாலையில் வழங்கப்பட்ட உணவில் புழு!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பெரிய புழு ஒன்று இருந்துள்ளதை அடுத்து வைத்தியசாலை உணவக ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளி இதய நோயாளி என்றும், அவருக்கு வழங்கப்பட்ட ப்ரோக்லி இல் குறித்த புழு இருந்ததாகவும் நோயாளியின் மகள் உணவக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவனம் செலுத்துமாறும் நோயாளி ஒருவருக்கு வழங்கப்படும் உணவு குறித்து சுகாதார முறையில் நடந்து கொள்ளுமாறும் அவர் மேலும் உணவக ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles