NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரிட்டன் மன்னராக 3ஆம் சார்ள்ஸ் முடி சூடினார்!

பிரிட்டன் மன்னராக மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் மூன்றாம் சார்ள்ஸ் முடிசூடிக்கொண்டார்.

மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது முடிசூட்டு நிகழ்ச்சியில் அணிந்த அதே எட்வர்ட் மகுடத்தை தலையில் அணிந்து முடிசூடிக்கொண்டார் அரசர் இரண்டாம் சார்ள்ஸ். இதையடுத்து, அவரது மனைவி கமீலா பார்கருக்கு ராணிக்கான மகுடம் சூட்டப்பட்டது.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்துக்கு தங்க ரதத்தில் வந்திறங்கிய மூன்றாம் சார்ள்ஸ். அவருடன் ராணி கமீலாவும் வருகை தந்தார். அவர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முடிசூடுவதற்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டு, உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்ட நிலையில் முதல் முறையாக, வெல்ஸ் மொழியில் பாடல்கள் இசைக்கப்பட்டன.

முன்னதாக, பிரிட்டன் மன்னருக்கான அரியணை திறக்கப்பட்டு, தங்க அங்கி அணிந்திருந்த மன்னர் அதில் அமரவைக்கப்பட்டார்.

அங்கு அவரது கையில் செங்கோல் வழங்கப்பட்டது. பாரம்பரியமிக்க சிறிய கரண்டியில் பிரத்யேக எண்ணெய் தலையில் விடப்பட்டது. பிறகு அரியணையில் அமர்ந்திருந்த பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தலையில் எட்வர்ட் மணிமகுடத்தைச் சூட்டினார்

பேராயர். சுமார் 700 ஆண்டுகால பாரம்பரியமிக்க மாளிகையில், பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்ள்ஸ் முடிசூட்டிக்கொண்டார்.

Share:

Related Articles