NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரித்தானிய இளவரசி டயானாவின் 26ஆம் ஆண்டு நினைவு நாள்! 

பிரித்தானிய இளவரசி டயானா அந்நாட்டு மக்களால் மட்டும் கொண்டாடப்பட்ட பிரபலான பெண் அல்ல, உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர்.

உருவத்தால் மட்டுமின்றி குணத்தாலும் பேரழியாக திகழ்ந்தவர் டயானா என கூறினால் அது மிகையாகாது..!

டயானாவுக்கும், சார்லஸுக்கும் கடந்த 1981ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் அந்த திருமணத்தை கண்டுகளித்தனர். மேலும் 6 லட்சம் பேர் பங்கிங்காம் அரண்மனையிலிருந்து தேவாலயம் வரை வழி நெடுக நின்றிருந்தனர்.

டயானாவின் திருமணம் நடந்த ஓராண்டுக்கு பின்னர் 1982ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்தான் இளவரசர் வில்லியம். 1984ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி வில்லியமிற்கு தம்பி பிறந்தார். அவருக்கு ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் என்று பெயர் சூட்டப்பட்டாலும் இளவரசர் ஹாரி என்று அழைக்கப்படுகிறார்.

அரச குடும்ப மருமகளாக இருந்தாலும் அதை ஒரு போதும் வெளிக்காட்டாத டயானா சாதாரண மக்களுடன் மிகவும் அன்பாக பழகினார். சேவை மனப்பான்மை மிக்கவரான டயானா நர்சரிகளுக்கும்இ பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் அடிக்கடி சென்றார். மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்ததால் அவர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை வெளிக்கொண்டு வந்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. எய்ட்ஸ் குறித்த பல கருத்துகளை அவர் தகர்த்தார். எய்ட்ஸ் நோயாளிகளிடம் கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அவர்களுடன் பேசுவதாலோ பழகுவதாலோ எந்த பாதிப்பும் இல்லை என்று நிரூபித்தார்.

1996ம் ஆண்டு டயானா மற்றும் சார்ல்ஸின் விவாகரத்து உறுதியானது. பின்னர் 1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் திகதி தனது காதலர் தோதி அல் ஃபயத்துடனான பிரான்ஸின் பாரீஸில் விருந்திற்கு சென்ற பிறகு ஆடம்பர் வாகனத்தில் ஏறி கிளம்பினார்.

அப்போது அவர்களின் காரை பாப்பராசி எனப்படும் தனிமுறை புகைப்படக்கலைஞர்கள் பின் தொடர்ந்தனர். இளவரசியின் காதலரை புகைப்படம் எடுக்க அவர்கள் முயல கார் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் டயானா, தோதி மற்றும் கார் ஓட்டுனர் பவுல் ஆகிய மூவர் உயிரிழந்தனர், பாதுகாவலர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்து கொண்டார்.

Share:

Related Articles