அளுத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிமுல்ல புகையிரத நிலையத்திற்கும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரதம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.