NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 130 புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி 2019 மற்றும் 2023 க்கு இடையில், அனுராதபுரம் மாவட்டத்தில் சுமார் இருபதாயிரம் சிறுநீரக நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 

அந்த காலகட்டத்தில், சுமார் நான்காயிரம் சிறுநீரக நோயாளிகள் இந்த நோயினால் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும், கடந்த வருடம் 1,200 புதிய சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் ஆண்கள் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

மேலும் அந்த பகுதிகளில் கிடைக்கும் நீரின் பயன்பாடு, வறட்சியான காலநிலையால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மரபியல் பரவல் போன்றவையும் சிறுநீரக நோய்க்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles