NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டு காலத்தில் பயணிகளுக்காக விசேட போக்குவரத்து சேவை!

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்காக கிராமங்களுக்கு செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் 7,000 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பின் கீழ் 3000 பஸ்களும் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 4000 பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயணிகளின் தேவைக்கு ஏற்ப மேலும் 300 தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles