NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புறா தீவுக்குப் பூட்டு – காரணம் வெளியானது!

வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் கடலில் புயல் உருவாகும் அபாயம் உள்ளதால் திருகோணமலை – நிலாவெளியில் உள்ள புறா தீவு தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

படகு மூலம் தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பெப்ரவரி இறுதி வரை இந்த காலநிலை நீடிக்கும் என்றும், இதற்கிடையில் கடல் சாதாரணமாக இருக்கும் சில நாட்களில் சுற்றுலாப் பயணிகள் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படலாம் என, புறா தீவு பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles