NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் தற்கொலை…!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவரின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை – நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயது மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles