NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொரளையில் விசேட தேடுதல் நடவடிக்கைகள்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் 2 சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா கலந்த மயக்க மருந்துகளுடன் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இரு வாள்களை வைத்திருந்த 2 சந்தேக நபர்கள்,19 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 26,75,440 ரூபாவும், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 2,15,000 ரூபாவும் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles