NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

போராட்டத்தில் குதித்துள்ள மாதவனை பண்ணையாளர்கள் – கறுப்பு தினம் அனுஷ்டிப்பு!

மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் பட்டிப்பொங்கல் தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பொங்கல் பானையில் கறுப்பு நிற துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலங்களாக மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் பூர்வீக பகுதிகளான மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் மாடுகளை மேச்சலுக்கு விடும் தமிழ் பண்ணையாளர்கள் சில பெரும்பான்மை இனத்தவர்களால் அச்சுறுத்தபடுகின்றனர்.
அதேவேளை, பொறி வைத்து பிடித்து கால்நடைகளை வெட்டும் செயற்பாட்டிலும் அத்து மீறிய குடியேற்றவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேச்சலில் ஈடுபடும் மாடுகளை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்யும் கொடூரங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்த அட்டூழியங்களுக்கும், காணி ஆக்கிரமிப்புக்கும் நீதி கோரி மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இதற்கான நிரந்தர தீர்வினை வழங்க அரசாங்கம் தாமதித்து வருகிறது.

இந்தநிலையில், மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படும் பட்டிப் பொங்கலான இன்று பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் அட்டூழியங்களுக்கு நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles