அமெரிக்காவின் அயோவா மாநிலத்தின் க்ரீன் கவுன்டி பிராந்தியத்தில் ஜெஃபெர்சன் நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வந்த 7 வயது சிறுவனை அவரது தந்தை கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (30) மதியம், குறித்த பள்ளிக்கு வந்த சிறுவனின் தந்தை அவரை, பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறியுள்ளார். அவர்கள் மறுக்கவே, வாக்குவாதம் செய்து மகனை அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து பொலிஸாருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து ‘ஆம்பர் அலர்ட்’ எனும் எச்சரிக்கை வெளியிட்ட பொலிஸார், காணாமல் போன இருவரை குறித்தும் பொதுவெளியில் விவரங்களை வெளியிட்டு, பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்குமாறு கோரினர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு அவர்கள் சென்ற வாகனத்தை கண்டடுபிடித்த பொலிஸார், அதனை நிறுத்த முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்று வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கிய சிறுவனின் தந்தை, சிறுவனை தூக்கி கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் ஓடினார்.
பின்தொடர்ந்த பொலிஸார் அவரை கைது செய்து, சிறுவனை மீட்டுள்ளனர். இந்நிலையில், அவர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.







