தேசிய மக்கள் சக்தியின் கன்னி வரவு – செலவு திட்டம் நேற்று
பாரளுமன்றில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவினால் முன் வைக்கப்பட்டது.
குறித்த வரவு – செலவு திட்டத்தில் மக்கள் நலனுக்காக பல
வேலைத்திட்டங்கள் உள்வாங்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள்
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில்,
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த 3,000 மில்லியன்
ரூபா ஒதுக்கீடும், மகளிர், சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் திறன்
அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக 120
மில்லியன் ரூபா ஒதுக்கீடும்,
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி
செய்ய மாதாந்திர உதவித்தொகையுடன், 7500 மில்லியன் ரூபா
ஒதுககீடும், திரிபோஷ வேலைத்திட்டத்திற்காக 5,000 மில்லியன்
ரூபா ஒதுக்கீடும்,
சுகாதார துறைக்கு 604 பில்லியன் ரூபா ஒதுக்கீடு இதில் மருந்து
வழங்கல் மற்றும் சுகாதார வழங்கலை உறுதிப்படுத்துவதற்காக 185
பில்லியன் ரூபா ஒதுக்கீடும
பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை
உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா
ஒதுக்கீடும், புலமைபரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான
மாணவர் உதவி தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக
அதிகரிப்பதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடும்,
யாழ் நூலகத்திற்கு கணினி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை
பெற்றுக் கொடுக்க 100 மில்லியன் ரூபாவும் ஏனைய நூலகங்களின்
அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடும்,
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்தம் கொடுப்பனவு
வழங்கும் வகையில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடும்,
பெருந்தோட்ட வீட்டு அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு
அபிவிருத்திற்காக 4,268 மில்லியன் ஒதுக்கீடும்,
அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பள அதிகரிப்புக்கா 110
பில்லியன் ரூபா உள்ளிட்ட ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன