மட்டக்குளி – பர்கியூசன் வீதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சில குழுக்களுக்கு இடையில் கடந்த இரு வாரங்களாக முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக இன்று (25) காலை குறித்த தோட்டத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை குறித்த மோதலில் மேலும் சில இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.